கோத்தகிரியில் தேயிலை தோட்டம் அருகே புதைக்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை; போலீசார் விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பாதியளவு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பாதியளவு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் வழியில், பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் கால் மண்ணிற்குள் தெரிந்துள்ளது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பார்த்த போது, பிறந்த குழந்தையை லேசான மண்மூடி இருந்தது தெரியவந்தது.



இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோத்தகிரி காவல்துறையினர், பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றினர். இந்த பச்சிளங் குழந்தை தவறான வழியில் பிறந்ததால் வீசப்பட்டதா? அல்லது வேரேதேனும் காரணங்கள் உள்ளதா? வீசியவர்கள் யார்? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...