மதரீதியாக பிளவுபடுத்தவே குடியுரிமை திருத்த சட்டம் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சஞ்ஜய் ஜா

கோவை: மத ரீதியான பிளவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவே குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக கோவையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்ஜய் ஜா தெரிவித்துள்ளார்.

கோவை: மத ரீதியான பிளவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவே குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக கோவையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்ஜய் ஜா தெரிவித்துள்ளார்.

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சஞ்ஜய் ஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு? எத்தனை விவசாயிகள் இந்த ஆட்சியில் தற்கொலை செய்துகொண்டனர்? பிரதமரின் கல்வித்தகுதி என்ன? இப்படி பல கேள்விகள் நிலுவையில் உள்ள நிலையில், நாம் அனைவரும் இந்திய குடிமக்கள் என்பதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க கூறுகின்றது தற்போதைய மத்திய அரசு என்று குற்றம்சாட்டினார்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை சான்று மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இச்சட்டங்கள் இஸ்லாமியர்களை மட்டும் குறிவைக்கவில்லை, தலித் மக்கள், மலை வாசிகள் மற்றும் மற்ற சிறுபான்மையினரையும் குறிவைத்து கொண்டுவரப்பட்டுள்ளன. இச்சட்டத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடிய 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட பிறகே பிரதமர் வாய்திறந்து தனக்கு வருத்தமளிப்பதாக கூறியிருக்கிறார் என்றார்.

மேலும், ஆதார் மூலம் ஏற்கனவே மானியங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவு மூலம் அவற்றை வழங்க வேண்டிய அவசியம் என்ன? அசாமில் என்.ஆர்.சி மூலம் கண்டறியப்பட்ட சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பலர் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்பதால் அவசரமாக குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற நிலை தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. 1947க்கு பின் தற்போது தான் மத்திய அரசின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மோதல் போக்கை நாம் எதிர்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...