தீர்ப்பு நகலில் இருந்த பிழையால் சிறுமி பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சந்தோஷ் குமார் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சந்தோஷ்குமாரின் தீர்ப்பு நகலில் இருந்த பிழையால் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சந்தோஷ்குமாரின் தீர்ப்பு நகலில் இருந்த பிழையால் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு கொலை குற்றத்திற்காக தூக்குத் தண்டனையும், போக்சோ சட்டம் (5&7)க்கு இயற்கையான மரணம் அடையும் வரைக்கும் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டம் 201க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சந்தோஷ் குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் இன்று தூக்கு தண்டனை பெற்ற சந்தோஷ்குமார் கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும், குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு நகலில் அச்சுப்பிழை இருப்பதால் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்க பிழைகளை திருத்தி தீர்ப்பு நகல் வழங்கப்பட்டதையடுத்து, மீண்டும் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் பிழையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டதால் போக்ஸோ நீதிமன்ற ஸ்டெனோவிற்கு மெமோ கொடுக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...