கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொருவரின் டிஎன்ஏ கலப்பு இருப்பதாக வெளியான அறிக்கையையடுத்து நீதிமன்ற உத்தரவு படி புதிய சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த மார்ச் மாதம் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில் இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல 26 சாட்சிகளை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி 8 எதிர்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களும் எதிராக வாதங்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணை முடிந்தது.
இந்தநிலையில் கடந்த 27ஆம் தேதி சந்தோஷ்குமாருக்கு கொலை குற்றத்திற்காக தூக்குத் தண்டனையும், போக்சோ சட்டம் (5&7)க்கு இயற்கையான மரணம் அடையும் வரைக்கும் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டம் 201க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இப்படியிருக்க பாதிக்கப்பட்ட சிறுமியின் கருப்பையிலிருந்து சேகரிக்கப்பட்ட திரவத்தில் கலப்பு டிஎன்ஏ சுயவிபரம் காணப்படுவதாக ரசாயன பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட எஸ்.பி சுஜித் குமார், ஏடிஎஸ்பி அனிதா, டிஎஸ்பி மணி ஆகியோரின் மேற்பார்வையில் கோவை மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனந்தநாயகி துடியலூர் சிறுமியின் வழக்கு தொடர்பாக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான விசாரணைகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றத்தில் தொடர்புடையவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அனந்தநாயகி இவ்வாண்டு தமிழக முதலமைச்சரின் சிறந்த புலன் விசாரணை அதிகாரிக்கான பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.