ஊராட்சி ஒன்றியங்களில்‌ உள்ள வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ கு.இராசாமணி ஆய்வு

கோவை: கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ இரண்டாம்‌ கட்டம்‌ ஊராக உள்ளாட்சித்‌ தேர்தல்‌ நடைபெறுவதையொட்டி, இன்று டிசம்பர் 30 ஆம் தேதி பெரியநாயக்கன்பாளையம்‌ ஊராட்சி ஒன்றியங்களில்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ வாக்குப்பதிவு மையங்களை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோவை: கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ இரண்டாம்‌ கட்டம்‌ ஊராக உள்ளாட்சித்‌ தேர்தல்‌ நடைபெறுவதையொட்டி, இன்று டிசம்பர் 30 ஆம் தேதி பெரியநாயக்கன்பாளையம்‌ ஊராட்சி ஒன்றியங்களில்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ வாக்குப்பதிவு மையங்களை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. 

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ இரண்டாம்‌ கட்ட தேர்தல்‌ நடைபெற்ற ஊராட்சி ஒன்றியங்களில்‌ மொத்தம்‌ 5,47,295 வாக்காளர்கள்‌ உள்ளனர்‌. சோமையம்பாளையம்‌ ஊராட்சியிலுள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம்‌ தொடக்கப்பள்ளி, காளப்பநாயக்கன்பாளையம்‌ நடுநிலைப்பள்ளி, பன்னிமடை ஊராட்சியிலுள்ள பன்னிமடை தொடக்கப்பள்ளி, கணுவாய்‌ தொடக்கப்பள்ளி, குருடம்பாளையம்‌ ஊராட்சியிலுள்ள பழனிக்கவுண்டன்புதூர்‌ தொடக்கப்பள்ளி, அசோகபுரம்‌ அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்கள்‌ உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில்‌ அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



இவ்வாய்வின்போது வட்டாட்சியர்‌ மகேஷ்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

மேலும், இரண்டாம்‌ கட்ட தேர்தல்‌ நடைபெறும்‌ பகுதிகளான சூலூர்‌, சுல்தான்பேட்டை, எஸ்‌.எஸ்‌.குளம்‌, அன்னூர்‌, பெரியநாயக்கன்பாளையம்‌, தொண்டாமுத்தூர்‌, காரமடை ஆகிய ஊரக உள்ளாட்சி பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்‌, கிராம ஊராட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ ஆகிய பதவிகளுக்கு நேரடித்‌ தேர்தல்‌ நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27 ஆம் தேதி அன்று நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்‌ 77.23 சதவிகிதம்‌ வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அதனைத்‌ தொடர்ந்து, இன்று இரண்டாம்‌ கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ நடைபெற்றுள்ளது. இரண்டாம்‌ கட்டம்‌ தேர்தல்‌ நடைபெறும்‌ 7 ஊராட்சி ஒன்றியங்களில்‌ 415 வாக்குச்சாவடி மையங்களில்‌ 878 வாக்குச்‌ சாவடிகள்‌ அமைக்கப்பட்டிருந்தன. 

இதில்‌ 152 வாக்குச்சவாடிகள்‌ பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதில்‌ 37 வாக்குச்சாவடி மையங்களில்‌ ஒளிப்பதிவு செய்யவும்‌, 3% மையங்களில்‌ வெப்‌ கேமரா பொருத்தப்பட்டும்‌, மீதமுள்ள 80 வாக்குச்சாவடி மையங்களில்‌ நுண்‌ தேர்தல்‌ பார்வையாளர்கள்‌ மூலம்‌ கணர்காணிக்கப்பட்டது.

மேலும்‌ ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான குடிநர்‌, மின்விசிறி, பெஞ்சு, மின்சார வசதி, கழிவறை, மாற்றுத்திறனாளிகள்‌ எளிதாக வந்து வாக்களிக்க சக்கரநாற்காலி, சாய்தள வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும்‌ செய்யப்பட்டிருந்தது.

இரண்டாம்‌ கட்டத்‌ தேர்தல்‌ நடைபெறும்‌ ஊராட்சி ஒன்றியங்களில்‌ 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ பதவிக்கு 46 வேட்பாளர்களும்‌, 89 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்‌ பதவிக்கு 367 வேட்பாளர்களும்‌, 101 ஊராட்சி மன்ற தலைவர்‌ பதவிக்கு 383 வேட்பாளர்களும்‌, 1014 ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ பதவிக்கு 3221 வேட்பாளர்களும்‌, என மொத்தம்‌ 1214 பதவிகளுக்கு 4017 வேட்பாளர்கள்‌ போட்டியிடுகிறார்கள்‌.

வாக்குப்பதிவு நடைபெறும்‌ அனைத்து வாக்குச்சாவடிகளில்‌ வாக்காளர்கள்‌ சிரமின்றி வந்து தங்கள்‌ வாக்கினை பதிவு செய்வதற்கு ஏதுவாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள்‌, பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...