கோவை: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றிய வெள்ளியங்காடு ஊராட்சி தமிழக-கேரள எல்லைப் பகுதியில், மூணு குட்டை , அறக்கடவு உள்ளிட்ட ஆதிவாசி மலைகிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த ஐந்து தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வரும் நிலையில், போதிய சாலை வசதிகள் ஏதும் இல்லாமல் குண்டும் குழியுமான ரோடுகளில் அன்றாடம் பயணித்து வருகின்றனர்.

ஒரு அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து கோப்பனாரி பகுதிக்கு வந்துதான் பஸ் மற்றும் மருத்துவ பள்ளி உள்ளிட்ட வேளை வந்து செல்லும் இவர்கள், யாருக்கு ஓட்டு போட்டு என்ன பயன் என மனம் குமுறும் இவர்கள் தற்போது நடைபெற்றும் வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

எங்கள் நிலை குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மக்கள் நல பரதிநிதிகளுக்கும் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர், அதனால் அந்த பகுதி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
இன்று தேர்தல் நடத்தப்படும் அரக்கடவு அரசுப்பள்ளியில் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டு வாக்கு பெட்டிகள் வைக்கபட்டன, தேர்தல் அதிகாரிகள் அனைவரும் வந்திருந்த நிலையில் வாக்களிக்க கிராம மக்கள் யாரும் வரவில்லை.
இதனால் அரசு அதிகாரிகள் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் தங்கள் கிராமத்திற்கு கோபனாரி வரை முறையான சாலை அமைக்க உரிய அனுமதி கடிதத்தை கிராம மக்களிடம் காண்பித்தால் மட்டுமே வாக்களிப்போம் என கூறி இதுவரை அந்த கிராம மக்கள் வாக்களிக்காமல் உள்ளனர்.
மேலும் வாக்கு மையம் முன்பு ஒன்று கூடிய கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கையில் கருப்பு கொடியுடன் வந்திருக்கின்றனர்.
இதனிடையே மூனுகுட்டையில் மட்டும் மொத்தம் 130 வாக்குகள் என்ற நிலையில் கிராம மக்களின் போராட்டத்தை அறியாத இரு முதியவர்கள் மட்டும் இதுவரை வாக்களித்துள்ளனர்.
எனவே, தற்போது வரை இரண்டு வாக்குகள் மட்டுமே இந்த வாக்கு மையத்தில் பதிவாகியுள்ளது.