கோவை: கோவை மாவட்டத்தில் சமீபகாலமாகவே செல்போன் பறிப்பு, சங்கிலி பறிப்பு, இருசக்கர வாகனம் திருட்டு ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிலிண்டர் விலை உயர்வால் விநியோகஸ்தர்களை குறிவைக்கும் கொள்ளை கும்பல்; ஒன்று கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இப்படி, கொள்ளைக் கும்பல்கள் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் விநியோகஸ்தரின் சிலிண்டரையும் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அப்புசாமி லேஅவுட் அருகே புலியகுளம்-ரேஸ்கோர்ஸ் செல்லும் சாலையில் வீடுகளுக்கு சிலிண்டர் போட்டுக்கொண்டிருந்த விநியோகஸ்தரின் சிலிண்டரை அவரது வாகனத்திலிருந்து திருடிச் சென்றுள்ளது ஒரு கும்பல்.
இதைத்தொடர்ந்து அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு நபர் சிலிண்டரை திருடும் நோக்கத்தோடு அந்த பகுதியில் சுற்றி வந்ததும், பின்னர் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிலிண்டரை எடுத்து மற்றொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து டி-1போலீசார், சிலிண்டரை தூக்கி சென்றவர்களை சிசிடிவி கட்சிகளின் அடையாளத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாளுக்கு நாள் சிலிண்டரின் விலை உயர்வு ஏறிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் சிலிண்டர்களை குறிவைத்து திருடும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.