கோவை: வடகோவை அஹ்லே சுன்னத் ஜமாத்தின் உறுப்பினர்கள் புறக்கணிக்கபட்ட 734 பேர்கள் வாக்களிக்கவும் தேர்தலை முறையாக நடத்த ஆவண செய்ய வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்:
1445 பேர் கொண்ட திருத்தபட்ட இறுதி வாக்காளர் வரைவு பட்டியல் வாரிய அதிகாரிகளால் 21.1.19ல் ஒட்டபட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 23.12.19 அன்று நிர்வாகிகள் இல்லாத நேரத்தில் முன் அறிவிப்பின்றி 711 பேர் கொண்ட வாக்காளர் பட்டியல் ஒட்டபட்டு, அதில் வரும் 2ம் தேதி வேட்பு மனு தாக்கலும் தேர்தல் நடைபெறும் என குறிப்பிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
எதிர் தரப்பு இல்லாமல் தேர்தலை நடத்தி போட்டியின்றி ஒரு சிலர் நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். முஸ்லிம் சமூகத்தினர் ஜமாத்துடன் உடனான தொடர்பை துண்டிக்க முடியாது எனவும் புறக்கணிக்கபட்டவர்கள் தங்களது உரிமைகளான திருமணம் மற்றும் அடக்கஸ்தலத்திற்கான தடையில்லா சான்றிதழ் பெற பாதிப்புகள் ஏற்படும் என்றனர்.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் எனவும் தேர்தலை முறையாக நடத்த ஆவண செய்ய அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தேர்தல் அறிவிப்பு எண் 6 வக்பு வாரியத்தின் நகல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெற்ற ஆணை நகல்களை தமிழக தலைமை செயலக முதல்வர் தனிப்பிரிவுக்கும், வடக்கு வட்டாட்சியர் மற்றும் காவல் துறை ஆணையாளருக்கும் அனுப்பபட்டு உள்ளதாக தெரிவித்தனர்.