கோவை: கோவை ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கப் பதிவு, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கோவை: கோவை ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கப் பதிவு, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நிறைவடைந்த நிலையில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் உட்பட 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
பேரூர் செட்டிபாளையம், தி.தி.பாளையம், மாதம்பட்டி, உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் கிராம மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவு வாக்களித்து வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது.. 10 ஊராட்சி வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.