2019ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது; கவிஞர் அபிக்கு வழங்கப்பட்டது

கோவை: 2019-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமை அபி அவர்களுக்கு வழங்கப்பட்டது. டிசம்பர் 28ம் தேதி (சனிக்கிழமை) கோவையில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

கோவை: 2019-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமை அபி அவர்களுக்கு வழங்கப்பட்டது. டிசம்பர் 28ம் தேதி (சனிக்கிழமை) கோவையில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. 

தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.1,00,000/-விருது தொகையும் உள்ளடக்கியது.

விருது விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அஸ்ஸாமைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் ஜானவி பரூவா, மலையாள கவிஞர் கே.ஜி. சங்கரப்பிள்ளை, தமிழ் எழுத்தாளர்களான ஜெயமோகன், ரவி சுப்ரமணியம், பெருந்தேவி, வாசகி ஸ்வேதா சண்முகம், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். விருதினை கே.ஜி.சங்கரப்பிள்ளை மற்றும் ஜானவி பரூவா ஆகியோர் கவிஞர் அபிக்கு வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய மலையாளக் கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை பேசுகையில், கவிஞர் அபி அமைதியானவராக இருக்கிறார். ஆனால் அவரின் கவிதையில் அமைதியின்மையை உணர முடியும். கவிஞர்கள் அமைதியின்மையாக இருந்தால் தான் கவிதைகள் உருவாகின்றது. அரூவமான மொழியில் எழுதப்பட்ட வலுவான கவிதைகள் அபியினுடையது. தன் கவிதைகளில் மனித நாகரீகத்தின் மீது எதிர்ப்பை முன் வைக்கிறார். குறிப்பாக தற்போதைய இந்தக் காலகட்டத்துக்கான கவிதையாக உள்ளது அபியினுடையது. மேலும் அவர் வரவிருக்கும் தலைமுறையுடனும் தன் கவிதைகளின் வழியாக உரையாடிக் கொண்டிருக்கிறார். என்றென்றும் உலகத்தரமான கவிதைகள் அபியினுடையது என்று பேசினார். 

விழாவில் கே.பி.வினோத் இயக்கிய கவிஞர் அபி குறித்த ஆவணப்படம் ‘அந்தர நடை’ திரையிடப்பட்டது. நிகழ்வில் கவிஞர் அபி படைப்புலகு குறித்து கலைவிமர்சகர்கள் எழுதிய நூலும் விழா மேடையில் வெளியிடப்பட்டது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...