திருப்பூர்: மதமாற்ற தடை சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்ட மசோதா ஆதரவு பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் குமரன் சிலை அருகே இருந்து துவங்கிய பேரணியில் ஆயிரக்கணக்கான இந்து முன்னணியினர் கையில் தேசியக் கொடியினை ஏந்தியும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து பதாகைகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்து திருப்பூர் வளம் பாலம் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தனர்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு இந்து முன்னணி ஆதரவு தெரிவிப்பதாகவும் இதனை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு கூடிய விரைவில் மதமாற்ற தடை சட்டம் மற்றும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைப்பதாக கேட்டுக்கொண்டார்.