மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் பகலிலேயே மெய் மறந்து தூங்கி ஒய்வு எடுக்கும் யானைகள்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்று படுகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12வது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த மாதம் 15 ந் தேதி தொடங்கி தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகின்றது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்று படுகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12வது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த மாதம் 15 ந் தேதி தொடங்கி தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகின்றது.

முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த திருக்கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் முகாமில் பங்கேற்று புத்துணர்வு பெற்று வருகின்றன.

தினசரி காலை மாலை 2 வேளையும் யானைகளுக்கு நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் ஷவர் மற்றும் குளியல் மேடையில் யானைகள் குளித்து மகிழ்கின்றன.அதன் பின்னர் யானைகளுக்கு சமச்சீர் உணவுடன் ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன மேலும் மருத்துவக்குழுவினர் யானைகளை பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

முகாம் துவங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிய நிலையில் யானைகள் நல்ல முறையில் பராமரிக்கபட்டு வருவதால் பகலிலேயே படுத்து ஓய்வெடுத்து வருகிறது. 



பொதுவாக யானைகள் தரையில் படுத்து தூங்குவது என்பது மிக அறிது, இயற்கையான சூழலில் இதமான தட்பவெப்பம் காரணமாக கோவில்யானைகள் முகாமில் பகலிலேயே மெய் மறந்து படுத்து உறங்கி வருகிறது.

பசுந்தீவனங்களையும் கலவை சாதங்களையும் உண்டு ருசிக்கும் கோவில் யானைகள் உண்ட மயக்கத்தில் ஒய்யாரமாக படுத்து ஒய்வு எடுத்து வருகிறது.

முகாமினை பார்க்க வரும் மக்கள் மற்றும் குழந்தைகள், யானைகள் மெய் மறந்து தூங்கும் காட்சியினை தங்கள் கைப்பேசிகளில் வீடியோ எடுத்து ரசித்து வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...