நீலகிரி: அரையாண்டு மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களான உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்ட மலை சிகரம் மற்றும் பைக்கரா படகு இல்லம் அதிகப்படியான நெரிசல் காணப்பட்டது.

சர்வதேச சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அரையாண்டுதேர்வு மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பைன் பாரஸ்ட் சூட்டிங் மட்டம் மற்றும் பைக்காரா படகு இல்லம் போன்ற சுற்றுலாத் தலங்களை பெரிதும் ரசிப்பது வாடிக்கை.

குறிப்பாக பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இங்கு படகுகள் குறைவாக காணப்படுவதால் நெடுநேரம் வரிசையில் நின்று காத்திருக்க சூழ்நிலை ஏற்படுகிறது எனவும் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மற்ற சுற்றுலா தளங்களை காண முடியாமல் ஏமாற்றம் அடைவதாக சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

"பைக்காரா படகு இல்லத்தில் மேலும் கூடுதலாக படகுகள் இயக்கினால் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி படகு சவாரி செய்வார்கள். எனவே, சுற்றுலா துறையினர் இதைக் கருத்தில் கொண்டு கூடுதலாக படகுகளை இயக்க வேண்டும்", என சுற்றுலா பயணிகள் சுற்றுலாத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.