கோவை அருகே எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குடோனில் தீப்பிடித்த சம்பவம்; தீ வைத்த மர்ம நபர்களின் வீடியோ காட்சிகள் வெளியீடு..!

கோவை: கோவை காந்திபுரம் அருகே பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ரகுபதியின் எலக்ட்ரானிக்ஸ் குடோனில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் அருகே பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ரகுபதியின் எலக்ட்ரானிக்ஸ் குடோனில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை காந்திபுரம் அருகே உள்ள டாக்டர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த ரகுபதி(53). பெருந்தலைவர் மக்கள் கட்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும், இவர் காந்திபுரம் 1வது வீதியில் பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மோட்டார் சைக்கிள், டிவி ஆகியவற்றை அருகே உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் வைத்து பழுது பார்த்து விற்பனை செய்து வருகிறார்.



இந்த நிலையில், நேற்று இரவு இவர் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் இன்று காலை இவரது பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைக்கும் குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கருகி நாசமாகின.



இந்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ரகுபதி கொடுத்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், எலக்ட்ரானிக் குடோனில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ பற்ற வைத்து செல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த காட்சிகளை வைத்து போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...