கோவையில் ஆயிரம் பறையிசை கலைஞர்கள் ஓரே இடத்தில் பறை இசைத்து உலக சாதனை முயற்சி

கோவை: கோவை அடுத்த நீலாம்பூரில் உள்ள கதிர் கல்லூரி வளாகத்தில் உலக சாதனை முயற்சியாக ஆயிரம் பறையிசை கலைஞர்கள் ஒன்று கூடி ஓரே இடத்தில் பறை இசைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கோவை: கோவை அடுத்த நீலாம்பூரில் உள்ள கதிர் கல்லூரி வளாகத்தில் உலக சாதனை முயற்சியாக ஆயிரம் பறையிசை கலைஞர்கள் ஒன்று கூடி ஓரே இடத்தில் பறை இசைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கிராமிய புதல்வன் என்ற குழு ஒருங்கிணைப்பின் பேரில் கோவை மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறையிசை குழுக்கள் ஒன்றாக சேர்ந்து பறை வடிவில் வட்டமாக நின்று பறையடித்தனர். பறையிசை கலைஞர் வேலு ஆசான் மற்றும் கிராமிய புதல்வன் கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் பகையரசன் ஆகியோர் வழிகாட்டுதலில் இந்த சாதனை முயற்சியானது நடைபெற்றது.



5 வயது சிறுமி முதல் 50 வயது பெரியவர் வரை இந்த பறையிசை சாதனை முயற்சியில் பங்கெடுத்துப் பறை இசைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் பறைவடிவில் வட்டமாக நின்று பறையடித்த கலைஞர்கள் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லிம்கா புக் ரெக்கார்ட்ஸ் போன்ற சாதனைகளை பதிவு செய்யும் அமைப்பின் சான்றிதழ்களை பெற்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...