கோவை: ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபடவே மூன்று ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க அரசும் அமைச்சர் வேலுமணியும் தள்ளிப்போட்டதாக மேட்டுப்பாளையத்தில் தி.மு.கவை சேர்ந்த அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கவிற்குட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தி.மு.க சார்பில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தி.மு.கவை சேர்ந்த அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒன்றிய மாவட்ட பஞ்சாயத்துக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான அப்பாவு ஓடந்துரை, சிக்கதாசம்பாளையம்,உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அப்பாவு, ஊரக பகுதிகளில் தெரு விளக்குகள் பொருத்துவதில் மட்டும் 12,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகவும் தொடர்ந்து பல்வேறு வழியில் பணம் சம்பாதிக்க உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால் அது அமைச்சருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் என்பதாலேயே மூன்று ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், தற்போது தி.மு.க வழக்கு தொடர்ந்ததால் தான் உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக கூறினார்.
மேலும், விரைவில் அமைச்சர் வேலுமணி குறித்த ஊழல் வழக்குகள் வர உள்ளதால் அவர் விரைவில் சிறைச்செல்வார் என பேசிய அப்பாவு, உள்ளாட்சியில் ஊழல் அற்ற நிர்வாகம் செய்ய தி.மு.க வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.