கோவை: இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளான இன்று கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், உள்ளாட்சித் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.
தமிழக இளைஞர்களுக்கு அரசியல் ஈடுபாடு மிகவும் குறைவாக உள்ளது என்றும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியதாக கூறிய அவர், தமிழகத்தில் மிக விரைவில் இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கும் என்றார்.
மேலும், வருகின்ற தேர்தல்களில் போட்டியிட இளைஞர்களுக்கு காங்கிரஸ் கட்சி அதிக அளவில் வாய்ப்புகளை வழங்க இருப்பதாக கூறிய அவர், காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறது என்றும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டம் பாஜக ஒரு பாசிசக் கொள்கை உடையது என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார்.