கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; மேலும் ஒருவர் கைது

கோவை: கோவை அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை 6 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை 6 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது உறவினரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 26ம் தேதி சிறுமி அவரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட காதலனுடன் அதே பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டனுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த கார்டனுக்குள் இருந்த சுமார் 6 பேர் கொண்ட கும்பல் 17 வயது சிறுமியின் காதலரை நிர்வாணப்படுத்தித் தாக்கியுள்ளனர். அத்துடன் அந்த இளைஞரை புகைப்படமும் எடுத்துள்ளனர். பிறகு அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தரப்பில் கடந்த 28ம் தேதி ஆர்.எஸ்,புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராகுல் (21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28) மற்றும் நாராயண மூர்த்தி(30) ஆகியோரை போலீஸார் கைது செய்து போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த சம்பவம் கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை என காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் கடந்த டிச 3ம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த நிலையில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வடவள்ளி நியூ தில்லைநகரை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் மணிகண்டன் (29) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னரே கைது செய்யப்பட்ட மற்றொரு மணிகண்டனின் உறவினர் ஆவார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...