பணத்திற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை; சுயமரியாதை எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வோம் - இளவேனில், தமிழ் புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர்

கோவை: தமிழ் புலிகள் அமைப்பினர் பணத்திற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக எழுந்த குற்றச்சாட்டு நிலையில் பணத்திற்காக மாற வேண்டிய அவசியமில்லை, சுயமரியாதை எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வோம் என தமிழ் புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் இளவேனில் தெரிவித்தார்.

கோவை: தமிழ் புலிகள் அமைப்பினர் பணத்திற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக எழுந்த குற்றச்சாட்டு நிலையில் பணத்திற்காக மாற வேண்டிய அவசியமில்லை, சுயமரியாதை எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வோம் என தமிழ் புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் இளவேனில் தெரிவித்தார்.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியில் கடந்த 22ம் தேதி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கோவை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் தீண்டாமை கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமை சுவற்றினால் 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதம் மாற முடிவுகள் எடுக்கப்பட்டது.

இது தொடர்பான தீர்மானங்கள் செய்தி ஊடகங்களில் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் பணத்திற்காக மதம் மாற்றுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல, நடூர்பகுதி மக்கள் மதம் மாற விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இளவேனில் கூறியதாவது ;-

கேள்வி: இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுவது 

சாத்தியமா ?, அதுவும் 3 ஆயிரம் பேர் என்பது பல கேள்விகளையும்,

சந்தேகங்களையும் எழுப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறதே?

மேற்கு மாவட்டத்தை சேர்ந்த தமிழ் புலிகள் அமைப்பினர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் என 3 ஆயிரம் பேர் வரை மதம் மாற தயாராக உள்ளோம். இன்னும் அதிகம் தான் ஆகுமே தவிர எண்ணிக்கை குறைவாகாது. ஆனால், மேட்டுப்பாளையம் நடூர்பகுதி மக்கள் போலீசாராலும், பாஜகவினராலும் மிரட்டப்பட்டு உள்ளனர். அவர்களும் மதம் மாற தயாராக இருந்தனர். அரசின் நிதி உதவிகளை காண்பித்தும், மிரட்டப்பட்டும் அவர்கள் பின் வாங்கியுள்ளனர். நாங்கள் நடூர்பகுதியை மட்டும் கணக்கிட்டு மூன்றாயிரம் பேர் என தகவல் வெளியிடவில்லை. மேற்கு மாவட்டங்களை ஒன்றிணைத்து கணக்கிட்டு தான் பதிவிட்டு உள்ளோம்.

கேள்வி: பணத்திற்காக மதம் மாறுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறதே?

நாங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு பணம் வாங்கியதாக ஒரு சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர். நாங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும் அங்கும் சாதி உள்ளது. அதனால்தான் இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவெடுத்துள்ளோம். எங்களுக்கு தேவை சுய மரியாதைதான். அது எங்கு கிடைக்கிறதோ அதை நோக்கித்தான் செல்ல வேண்டியுள்ளது. இனி நாங்கள் ஒடிந்து குனிந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. 17 பேரின் மரணத்துக்கு நியாயம் கேட்டுப் போராடிய திருவள்ளுவன் தாழ்த்தப்பட்ட இந்து சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

கேள்வி: இதே முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஜவாஹிருல்லாவையோ, தெகலான் பாகவி போன்ற தலைவர்களையோ இப்படி தாக்குவார்களா?

பணத்திற்காக மாறுபவர்கள் நாங்கள் அல்ல. சுயமரியாதையை தேடி மதம் மாற உள்ளோம். தாழ்த்தப்பட்டவனின் வலி தாழ்த்தப்பட்டவனாய் பிறந்து 

பாதிக்கப்பட்டவனுக்கு தான் தெரியும். பலவீனப்படுத்த பணத்தை வாங்கியதாக திட்டமிட்டு சில அமைப்பினர் கொச்சைப் படுத்துகின்றனர். அவர்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...