திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 73.84 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது எனவும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 456 பேர் வாக்களித்துள்ளனர், என மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெள்ளக்கோவில் பகுதியில் 77.82 சதவீதம் மற்றும் காங்கயத்தில் 77.68 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. இதையடுத்து பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, போலீஸார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் இன்று (டிசம்பர் 27) மற்றும் வரும் 30ம் தேதி ஆகிய இரு கட்டங்களாக நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் என 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 784 வாக்குச்சாவடிகளில் முதற்கட்டமாக தேர்தல் இன்று நடைபெற்றது.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 396, ஊத்துக்குளியில் 445, காங்கயத்தில் 218, பல்லடம் 590, வெள்ளகோவில் 161, மூலனூர் 189 மற்றும் தாராபுரம் 294 என மொத்தம் 2293 பேரும் தேர்தலை சந்திக்கின்றனர். இவர்கள் தவிர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 247 பேர்.
ஊராட்சித் தலைவர் பதவிக்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64, ஊத்துக்குளியில் 136, காங்கயத்தில் 44, பல்லடம் 79, வெள்ளகோவில் 18 , மூலனூர் 50, மற்றும் தாராபுரம் 54 என மொத்தம் 445 பேரும் இன்றைக்கு தேர்தலை சந்திக்கின்றனர். இவர்கள் தவிர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 4 பேர்.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 38, ஊத்துக்குளியில் 65, காங்கயம் 48, பல்லடம் 49, வெள்ளகோவில் 24, மூலனூர் 51 மற்றும் தாராபுரம் 41 என 312 பேர் நேற்றைய தேர்தலில் போட்டியிட்டனர். தாராபுரம் பகுதியில் 62,891 வாக்காளர்கள், காங்கயத்தில் 53,680 வாக்காளர்கள், மூலனூரில் 41,011 வாக்காளர்கள், பல்லட்டத்தில் 1,14,351 வாக்காளர்கள், திருப்பூரில் 79,759 வாக்காளர்கள், ஊத்துக்குளியில் 67,125 வாக்காளர்கள், வெள்ளக்கோவில் பகுதியில் 43,460 வாக்காளர்கள் என 7 ஒன்றியங்களில் மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 400 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பதிவான வாக்குவிவரம்: தாராபுரம்: 47,340 ஆண்:23,747 பெண்:23,593 திருநங்கைகள்:0, காங்கயம்:41,701 ஆண்:20,851 பெண்:20,848 திருநங்கைகள்:2, மூலனூர்:30,820 ஆண்:15,148 பெண்:15,672 திருநங்கைகள்:0, பல்லடம்:77,747 ஆண்:38,680 பெண்:39,067 திருநங்கைகள்:0, திருப்பூர்:54,732 ஆண்:27,909 பெண்:26,822 திருநங்கைகள்:1, ஊத்துக்குளி:55,296 ஆண்:27,675 பெண்:27,671 திருநங்கைகள்:0,வெள்ளகோவில்:33,820 ஆண்:16,625 பெண்:17,192 திருநங்கைகள்:3,மாவட்டம் முழுவதும் முதல் கட்ட வாக்குப்பதிவில் ஆண் வாக்காளர்கள் 1,70,635, பெண் வாக்காளர்கள் 1,70,815, மூன்றாம் பாலினத்தவர்கள் 6 என மொத்தம் 3,41,456 வாக்களித்தனர். 1,20,944 பேர் வாக்களிக்கவில்லை. வாக்கு சதவீதம்:73.84 ஆகும்.