திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 3 மணி நேர நிலவரப்படி 56.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் 999 பதவிகளுக்கு 3088 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 396, ஊத்துக்குளியில் 445, காங்கேயத்தில் 218, பல்லடம் 590, வெள்ளகோவில் 161, மூலனூர் 189 மற்றும் தாராபுரம் 294 என மொத்தம் 2293 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 247 பேர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64, ஊத்துக்குளியில் 136, காங்கேயத்தில் 44, பல்லடம் 79, வெள்ளகோவில் 18 , மூலனூர் 50, மற்றும் தாராபுரம் 54 என மொத்தம் 445 பேரும் இன்றைய தேர்தலை சந்திக்கின்றனர். இவர்கள் தவிர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 4 பேர். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 38, ஊத்துக்குளியில் 65, காங்கேயம் 48, பல்லடம் 49, வெள்ளகோவில் 24, மூலனூர் 51 மற்றும் தாராபுரம் 41 என 312 பேர் இன்றைய தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் 3 மணி நேர நிலவரப்படி 56.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி தாராபுரம் 58.81%, காங்கேயம் 64.15%, மூலனூர் 63.32%, பல்லடம் 49.06%, திருப்பூர் 52.28%, ஊத்துக்குளி 65.46%, வெள்ளக்கோவில் 52.80% என மொத்தம் 56.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.