கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை; மாதர் சங்கத்தினர் வரவேற்பு

கோவை: 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு மாதர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்


கோவை: 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு மாதர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 1-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 1ம் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அதன்பின்னர் பலமணி தேடியபின்னர் மறுநாள் காலையில் வீட்டின் எதிர்புறம் உள்ள சந்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அந்த சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று உடலை வீசிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் இந்த கொடூரத்தை செய்து இருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேகித்தனர். பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இன்று காலை சந்தோஷ்குமார் தான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மாலை 3 மணிக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

இதனால் தீர்ப்பின் முடிவை கேட்க நீதிமன்ற அரை முழுவதும் பெண் வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் என ஒன்று கூடியிருந்தனர். மேலும், காவல்துறையை கண்டித்தும், மீதமுள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்திய மாதர் சங்கத்தினர், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்ற வளாகத்தில் கோஷங்களை எழுப்பினர். பின்னர் குற்றவாளி சந்தோஷ்குமார் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் மாதர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களை அந்த பகுதியில் இருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை, தடையங்களை அழித்தல் குற்றத்திற்காக 7 வருடம் சிறை தண்டனை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுமதிக்க வேண்டும் மேலும் ரூ.2000 ஆயிரம் அபராதம் விதித்து கோவையில் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

இதையடுத்து, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பாராட்டு தெரிவித்து மாதர் சங்கத்தினர் நீதிமன்றத்தில் கோஷங்களை எழுப்பினர். மேலும், தடயவியல் அறிக்கையில் மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ கலப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளதால் அந்த குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் உயிரிழந்த குழந்தையின் தாயார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு குறித்து உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தீர்ப்பு குறித்து மாதர் சங்கத்தின் பொறுப்பாளர் கூறும்போது ;-

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்த இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். குற்றவாளியுடன் மேலும் ஒருவருக்கு தொடர்பு உள்ளது. போலீசார் முறையாக விசாரணை நடத்தி மற்றொரு குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குற்றச்சம்பவத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்ப்பளித்தது வரவேற்கத்தக்கது என்றும் இதுபோல கடுமையான தண்டனைகள் வழங்கினால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்றனர்.

பின்னர் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சங்கர நாராயணன் கூறும்போது ;-

பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றவாளிக்கு போக்‌ஸோ பிரிவு -5/1m/6 -ன் படி ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்கு - 302-பிரிவின் படி தூக்குத் தண்டனை மற்றும் தடையங்களை அழித்தல் குற்றத்திற்காக 7 வருடம் சிறை தண்டனையும் சிறுமியின் குடும்பத்துக்கு அரசு பத்து லட்சம் நஷ்டஈடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதேபோல், குழந்தையின் கருப்பையில் மேலும் ஒருவரின் விந்தணு இருப்பது தொடர்பாக மறு விசாரணை கோரி குழந்தையின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மேல் விசாரணை நடத்த கோரி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் புலன் விசாரணை செய்ய கடுமையான பெண் அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் இந்த கடுமையான தண்டனைக்கு பிறகு யாரும் இளம் சிறார்களுக்கு வன்கொடுமை செய்ய கூடாது, செய்தால் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் ஏற்பட வேண்டும் என்றார்.

மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய மற்றொரு யார் என்பதை புலன் விசாரணை செய்த பின்னர் தான், அவருக்கு கிடைக்கும் தண்டனை தெரியவரும் எனவும் சிறுமி வழக்கில் குற்றம் நடந்தாக புகார் வந்தவுடன் காவல்துறையின் நல்ல புலன் விசாரணை தான் இந்த வழக்கின் வெற்றிக்கு காரணம், விசாரணையின் கடைசி கட்டத்தில் தான், சிறுமியின் டி.என்.ஏ அறிக்கை வந்தது. தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டதால் காவல்துறை அதன் மீதான நடவடிக்கை இனி மேல் தான் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...