கோவை: 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை, தடையங்களை அழித்தல் குற்றத்திற்காக 7 வருடம் சிறை தண்டனை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுமதிக்க வேண்டும் மேலும் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவையில் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கோவை: 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை, தடையங்களை அழித்தல் குற்றத்திற்காக 7 வருடம் சிறை தண்டனை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுமதிக்க வேண்டும் மேலும் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவையில் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 1-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 1ம் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அதன்பின்னர் பலமணி தேடியபின்னர் மறுநாள் காலையில் வீட்டின் எதிர்புறம் உள்ள சந்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று உடலை வீசிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் இந்த கொடூரத்தை செய்து இருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேகித்தனர்.
பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் சந்தோஷ்குமார் குற்றவாளி என இன்று காலை சந்தோஷ்குமார் தான் குற்றவாளி என கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், குற்றவாளி சந்தோஷ்குமாரின் தண்டனை குறித்த விவரத்தை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என கோவை நீதிமன்றம் தெரிவித்தது. தீர்ப்பின் முடிவை கேட்க நீதிமன்ற அரை முழுவதும் பெண் வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் என ஒன்று கூடியிருந்தனர்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, சாட்சி விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை, தடையங்களை அழித்தல் குற்றத்திற்காக 7 வருடம் சிறை தண்டனை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுமதிக்க வேண்டும் மேலும் ரூ.2000 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த குழந்தையின் தாயார் நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல் செய்த மனுவில் சந்தோஷ் குமார் ஒருவர் மற்றும் குற்றவாளி அல்ல. மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக டிஎன்ஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் அந்த குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுமீது மேல் விசாரணை நடத்தவும் நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு வரவேற்பும் பாராட்டும் தெரிவித்த மாதர் சங்கத்தினர், நீதிமன்றத்தில் கோஷம் எழுப்பியதோடு தடயவியல் அறிக்கையில் மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ கலப்பு இருப்பதாக வெளியானது குறித்து உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் வனிதா பேசுகையில், "சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு நன்றி. இதேபோல, மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இது போன்று பாலியல் வன்கொடுமை எங்கு நடந்தாலும் குற்றவாளிகளுக்கு எதிராக போராடுவேன்," இவ்வாறு அவர் கூறினார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 18ம் தேதி புதிதாக திறக்கப்பட்ட போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படும் முதல் தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.