கோவை: இருப்பு பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - கோவை இடையே புதியதாக துவங்கப்பட்டுள்ள மெமோ ரயில் போக்குவரத்து நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கோவை மாநகருக்கு தினசரி ரயில் 11 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. காலை முதல் மாலை வரை நாள் ஒன்றிக்கு எட்டு முறைக்கும் மேல் இயக்கப்படும் இந்த ரயிலை பள்ளி,கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் மற்றும் இதர தேவைகளுக்காக ஒரு நாளைக்கு 50,000க்கும் மேற்பட்டோர் இதில் பயணித்து வந்தனர். இதனையடுத்து, கடந்த மாதம் இந்த ரயில் சேவையை நவீனப்படுத்தும் விதமாக தெற்கு ரயில்வே கோவை மேட்டுப்பாளையத்திற்கு மெமோ ரயிலை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் தடத்தில் இயக்கப்பட்டு வந்த மெமோ ரயில் போக்குவரத்து 28, 29 ஆகிய தேதிகளான நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு தினங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் இருப்பு பாதைகளில் பராமரிப்பிற்கான பணிகள் நாளை முதல் துவங்கி இரு தினங்களுக்கு நடத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு தினங்களுக்கு மேட்டுப்பாளையம் கோவை இடையிலான மெமோ ரயில் போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்பிரஸ் ரயில் வழக்கம் போல் செயல்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.