கோவை ஊரக உள்ளாட்சி தேர்தல்; 12 மணி நேர நிலவரப்படி 31.23 சதவீதம் வாக்குகள் பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 12 மணி நேர நிலவரப்படி 31.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 12 மணி நேர நிலவரப்படி 31.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக, மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1,220 பதவிகளுக்கு 2,939 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 5 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,46,350 வாக்காளர்கள் உள்ளனர். 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தமாக 293 வாக்குச்சாவடி மையங்களில் 642 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 148 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, 48 மையங்களில் ஒளிப்பதிவு செய்யவும், 24 மையங்களில் வெப் கேமரா மூலமும் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மையங்களில் நுண் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்காக 4,494 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் உள்ளனர். மேலும், 2,350 காவலர்கள் 400 ஊர்காவல் படையினர், 100 முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது பகல் 12 மணி நேர நிலவரப்படி 31.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, வரும் 30ம் தேதி காரமடை, அன்னூர், சர்க்கார் சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர் மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...