கோவை: மேட்டுப்பாளையம் அருகே வாக்காளர்களுக்கு மலர் செடிகளை கொடுத்து வாக்கு சேகரித்த சுயேட்சை பெண் வேட்பாளர் தனக்கு வாக்களித்தால் பசுமையான ஊராட்சியாக மாற்றுவதாகவும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரம் முடிய இரு தினங்களே உள்ள நிலையில், இப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பிளிச்சி ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக கௌசல்யா என்பவர் போட்டியிடுகிறார். இவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் காரமடை அருகே உள்ள பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நூதன முறையில் செடி மற்றும் மர நாற்றுகளை கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வீடு வீடாகச் சென்ற அவர், ஒவ்வொரு வாக்காளர்களுக்கு மலர் நாற்றுகளையும் மரச்செகளையும் வழங்கி பிளிச்சி ஊராட்சியை அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் பசுமையான ஊராட்சியாக மாற்றவுள்ளதாகவும் அனைத்து அடிப்படை வசதிகளும் பெற்று தருவதாக வாக்குறுதி அளித்து தனக்கு வாக்களிக்க அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தனது ஊராட்சியில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாக்கப்படும் எனவும் அவர் பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.