கோவை: கோவை அடுத்த செட்டிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலையில் டேங்கர் லாரி கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வெளியூர் செல்பவர்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் பலர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
குறிப்பாக, கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி செல்பவர்களும், அதேபோல அவிநாசி சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை போன்ற சாலைகளில் பயணிப்பவர்களும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து ஓட்டுநர் உட்பட 8 பேர் கோவை விமான நிலையம் நோக்கி எல் அன்ட் டி பைபாஸ் சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, செட்டிபாளையம் சுங்கச்சாவடி அருகே எதிரே வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார். மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் ரமேஷ் (50), ஆதிஷா (12), மீரா (37), ரிஷிகேஷ் (7) என தெரியவந்துள்ளது. மேலும் காயமடைந்த விபின் ஜார்ஜ் (43), நிரஞ்சன் (11), ராஜா (44), ஆதிரா(16) ஆகியோர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.