திருப்பூரில் கறி வெட்ட பயன்படும் முட்டியை சுத்தம் செய்யும் போது கழுத்தில் அணிந்திருந்த துணியின் நாடா இறுக்கப்பட்டு வாலிபர் சாவு

திருப்பூர்: திருப்பூரில் கறி வெட்ட பயன்படும் முட்டியை சுத்தம் செய்யும் போது கழுத்தில் அணிந்திருந்த துணியின் நாடா இறுக்கப்பட்டு வாலிபர் இறந்த சம்பவம் குறித்து நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் கறி வெட்ட பயன்படும் முட்டியை சுத்தம் செய்யும் போது கழுத்தில் அணிந்திருந்த துணியின் நாடா இறுக்கப்பட்டு வாலிபர் இறந்த சம்பவம் குறித்து நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் திருப்பூர் -தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், அய்யபம்பாளையம் பிரிவு, பட்டத்தரசியம்மன் கோவில் அருகில் சக்தி சிக்கன் என்ற கறி கடையில் அங்கேயே தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். 



இந்நிலையில், ஏழுமலை இன்று இரவு வேலை முடிந்து கறி கடையில் உள்ள கறி வெட்ட பயன்படும் முட்டியை அரவை மிஷின் மூலம் சுத்தம் செய்யும் போது எதிர் பாரத விதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த துணியின் நாடா மாட்டி கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார்.

அருகில் உள்ள ஓட்டல் வேலை செய்பவர்கள் பார்த்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஏழுமலை இறந்த போது பதிவான சிசிடிவி காட்சிகளை காணும் போது நெஞ்சம் பதைபதைப்பதாக உள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...