கோவையில் மேகமூட்டத்தால் 15 நொடிகள் மட்டுமே பார்க்க முடிந்த சூரிய கிரகணம்..! பொதுமக்கள் ஏமாற்றம்

கோவை: வானில் நிகழும் அற்புதங்களில் ஒன்றான சூரிய கிரகணத்தை தமிழகத்தின் பல பகுதிகளில் பிரத்யேக கருவி மூலம் பார்த்து ரசித்த நிலையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய கிரகணத்தை பார்க்க ஆவலோடு காத்திருந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


கோவை: வானில் நிகழும் அற்புதங்களில் ஒன்றான சூரிய கிரகணத்தை தமிழகத்தின் பல பகுதிகளில் பிரத்யேக கருவி மூலம் பார்த்து ரசித்த நிலையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய கிரகணத்தை பார்க்க ஆவலோடு காத்திருந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.



பூமியின் துணைக்கோளான நிலவு, பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றது. அதேபோல், சூரியனை, பூமி நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இந்த இயற்கையான நிகழ்வில், சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கு இடையில் நிலவு வரும்போது, நிலவு, சூரியனை மறைக்கிறது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.



இந்த நிலையில், இன்று காலை சுமார் 8 மணியளவில் நிலவு, சூரியனை மறைக்கத் தொடங்கியது. இந்த சமயம் சூரியன் பிறைவடிவில் காட்சியளித்தது. கோவை, அவிநாசி, ஈரோடு, கரூர், திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பத்து இடங்களில் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்க்க, டெலஸ்கோப், பைனாகுலர் உள்ளிட்டவற்றோடு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவை மாவட்டத்தில் மட்டும் 20 இடங்களில் பொதுமக்கள் கிரகணத்தைப் பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.



இந்நிலையில், கோவையில் சூரிய கிரகணத்தை 1.24 நிமிடங்கள் பார்த்து ரசிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் 15 நொடிகள் மட்டுமே பார்க்க முடிந்தது. இதனால் சூரிய கிரகணத்தை பார்க்க ஆவலோடு காத்திருந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேசமயம், நெருப்பு போல வளை வடிவில் காணப்பட வேண்டிய சூரிய கிரகணம் கோவையில், பிறை வடிவமாகவும் பின்னர் வளை வடிவாகவும் வெள்ளை நிறத்தில் காட்சி தந்து காத்திருந்த பொதுமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஏமாற்றத்துடன் காத்திருந்த பொதுமக்களுக்கு சில வினாடிகள் தென்பட்ட சூரிய கிரகணத்தை கை தட்டியும் கூச்சலிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவையில் வெள்ளை வடிவில் வளை வடிவ சூரிய கிரகணம் தென் பட்டது தனி சிறப்பு என்றும் இந்த கிரகணத்தை கண்ணாடிகள் இல்லாமல் நேரடியாக பார்த்தாலும் பாதிப்பு இல்லை என மாவட்ட அறிவியல் மைய அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...