திருப்பூரில் மேகமூட்டத்தில் மூழ்கிய சூரியன்..! கிரகணத்தை பார்க்க ஆவலோடு காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம்

திருப்பூர்: திருப்பூரில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய கிரகணத்தை பார்க்க ஆவலோடு காத்திருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய கிரகணத்தை பார்க்க ஆவலோடு காத்திருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 



சுமார் 360 ஆண்டுகளுக்குப் பின்பு சூரிய கிரகணம் தமிழகத்தின் மேற்கு மண்டலங்களில் தெளிவாக தெரியும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அறிவியல் இயக்கத்தினர் சூரிய கிரகணத்தை பார்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரும், அதேபோல் திருப்பூர் கல்லூரி சாலை பகுதியில் தமிழ்நாடு வானவியல் சமூகம் சார்பிலும் டெலஸ்கோப் , பைனாகுலர் உள்ளிட்டவற்றோடு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்த காரணத்தால் சூரிய கிரகணத்தை பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சூரிய கிரகணத்தை பார்க்க ஆவலுடன் வந்திருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேகமூட்டம் காரணமாக இந்த முறை சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை எனவும் அடுத்து வருகின்ற சூரிய கிரகணம் ஹரியானாவில் பார்க்க முடியும் எனவும் தமிழ்நாடு வானவியல் சமூகத்தின் தலைவர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...