நீலகிரி: தமிழகத்தில் முதன்முறையாக மலைப்பிரதேசங்களில் விபத்துக்களை தடுக்க காெரியன் சுழலும் ரப்பர் உருளை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உதகையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலுள்ள நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பிரதேசங்களில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர் சேதம் நடக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் முதன்முறையாக தனியார் உதவியுடன் மாநில நெடுஞ்சாலைத்துறை சோதனை ஓட்டமாக நீலகிரி மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் கொரியா நாட்டில் விபத்துக்களை தடுக்க பயன்படுத்தப்படும் கொரியன் சுழலும் ரப்பர் உருளை தடுப்புச் சுவர்களை சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, உதகையில் இருந்து கல்லட்டி வழியாக 36 கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி, மைசூர் செல்லும் மிக ஆபத்தான மலைப்பாதையான கல்லட்டி மலைப்பாதையில் கொரியன் சுழலும் ரப்பர் உருளை தடுப்பு சுவர்களை சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த முயற்சி இப்பகுதியில் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் உள்ள மலைப் பாதைகளில் இதுபோன்ற உருளை தடுப்புச் சுவர்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொரியன் சுழலும் ரப்பர் உருளை தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.