சூடுபிடித்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்; தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் பொங்கலுக்கு வெள்ளையடிக்க இலவச ஏணி..!

கோவை: மேட்டுப்பாளையத்தில் தி.மு.க ஊராட்சி தலைவர் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் பொங்கலுக்கு வெள்ளையடிக்க இலவசமாக ஏணி தரப்படும் என கூறி இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் தி.மு.க ஊராட்சி தலைவர் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் பொங்கலுக்கு வெள்ளையடிக்க இலவசமாக ஏணி தரப்படும் என கூறி இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கவிற்குட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், இன்று தி.மு.க சார்பில் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்தும் ஒன்றிய மாவட்ட பஞ்சாயத்துக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனம் மூலம் ஊர் ஊராக சென்று பேரணி நடத்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்

சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்ப்பாளையம் பகுதியில் இருந்து துவங்கிய இந்த பேரணியானது கருப்பராயன் குட்டை, சிக்காரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்யக் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராமங்களில் பேசிய தி.மு.க வேட்பாளர்கள், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் பொங்கலுக்கு வெள்ளையடிக்க ஏணி இலவசமாக வழங்கப்படும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...