நாளை நெருப்பு வளைய சூரிய கிரகணம்..! கோவையில் 20 இடங்களில் பொதுமக்கள் பார்த்து ரசிக்க ஏற்பாடு

கோவை: நாளை நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் கோவையில் ஒன்றரை நிமிடங்கள் தெரியுமெனவும் பொதுமக்கள் பார்த்து ரசிக்க 20 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

கோவை: நாளை நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் கோவையில் ஒன்றரை நிமிடங்கள் தெரியுமெனவும் பொதுமக்கள் பார்த்து ரசிக்க 20 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

சூரிய கிரகணம் தொடர்பாக கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் விஞ்ஞான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை காலை 8 மணி முதல் 11.15 மணி வரை சூரிய கிரகணம் இந்தியா முழுவதும் தெரியும் எனவும் இதில் கோவை, அவிநாசி, ஈரோடு, கரூர், திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பத்து இடங்களில் சிறப்பான முறையில் சூரிய கிரகணம் தெரியும் என்றவர், காலை 9.30 மணியளவில் நெருப்பு வளையம் போல சூரிய கிரகணம் தெரியும் என்றார்.

மேலும், சூரிய கிரகணம் கோவையில் ஒன்றரை நிமிடங்கள் தெரியும் எனவும் ஊட்டி, காங்கேயத்தில் 3 நிமிடங்கள் தெரியும் என்று கூறிய அவர், சென்னை, காஞ்சிபுரம், தென் மாவட்டங்களில் பாதி சூரிய கிரகணம் தெரியுமெனவும் சூரிய கிரகணம் என்பது இயற்கை நிகழ்வு என்பதால் இது தொடர்பாக அச்சப்பட தேவையில்லை எனவும் இதனை பார்த்து ரசிக்க வேண்டும் என்று கூறினார்.

கோவை மாவட்டத்தில் 20 இடங்களில் பொதுமக்கள் கிரகணத்தைப் பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் சூரியனை எந்த நாளும், எந்த நிலையிலும் நேரடியாக பார்க்கக் கூடாது எனவும் இதனால் கண் பாதிப்படையுமென கூறிய அவர், கிரகணத்தை சோலார் கண்ணாடி மூலமாக பார்ப்பது பாதுகாப்பானது எனவும் கூலிங் கிளாஸ் அணிந்து பார்க்க கூடாது என்று கூறினார். மேலும், கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது, சமைத்த உணவை சாப்பிடக்கூடாது என்பவை கட்டுக்கதை எனவும் சோலார் கண்ணாடி அணிந்தாலும் 3 நிமிடங்கள் தொடர்ந்து பார்க்கலாம் என்று கூறிய அவர், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் 2010ல் வளைவடிவ சூரிய கிரகணம் தெரிந்ததாகவும், அடுத்த சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் 2034ம் ஆண்டு தெரியும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...