கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்; நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்த மக்கள்

கோவை: குழந்தை ஏசுவின் பிறப்பினை கொண்டாடும் விதமாக கோவையில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: குழந்தை ஏசுவின் பிறப்பினை கொண்டாடும் விதமாக கோவையில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.



உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .இதன் ஒரு பகுதியாக கோவையிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கோவையில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழைமையான புனித மைக்கேல் தேவாலயத்தில் கோவை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது





அப்போது, குழந்தை இயேசுவின் உருவம் கொண்ட பொம்மையை கையில் ஏந்தியபடி வந்த தலைமை ஆயர், அதைக் கொண்டு குடிலில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிலில் வைத்தார். 

இதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பை போற்றும் விதமாக பாடல்கள் பாடப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு துவங்கிய திருப்பலி மற்றும் பிராத்தனை நிகழ்ச்சிகள் அதிகாலை 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.



இதனை தொடர்ந்து, காலையில் மாற்று மதத்தினருக்கும், அண்டை வீட்டாருக்கும் கேக் மற்றும் உணவு பொருட்களை பரிமாறிக் கொண்டு, அனைத்து மதத்தினருடன் இணைந்து இந்த கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட இருப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டும், இணைப்புகளை பரிமாறிக்கொண்டும், உறவினர் வீடுகளுக்கு சென்று விளையாடியும் உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையினை கொண்டாட இருப்பதாக தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...