கோவை: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நல்லாட்சி தின விழா நிகழ்ச்சி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
கோவை: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நல்லாட்சி தின விழா நிகழ்ச்சி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
முன்னாள் பிரதமரும், மறைந்த பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அவரின் நினைவிடத்துக்குச் சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா நல்லாட்சி தின விழா நிகழ்ச்சி இன்று காலை கோவை பொண்ணையராஜபுரத்தில் கொடியேற்று விழா மற்றும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து மக்களிடம் விளக்கும் விதமாக நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதனையடுத்து, வாஜ்பாயின் 95வது பிறந்த நாளை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.