கோவை: 2019-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமை அபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) கோவையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ. 1,00,000/-விருது தொகையும் உள்ளடக்கியது.
விருது விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அஸ்ஸாமைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் ஜானவி பரூவா, மலையாள கவிஞர் கே.ஜி. சங்கரப்பிள்ளை, தமிழ் எழுத்தாளர்களான ரவி சுப்ரமணியம், பெருந்தேவி, ஸ்வேதா சண்முகம், ஜெயமோகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

இந்த விழாவில் கே.பி.வினோத் இயக்கிய கவிஞர் அபி குறித்த ஆவணப்படம் ‘அந்தர நடை’ திரையிடப்பட உள்ளது. நிகழ்வில் கவிஞர் அபி படைப்புலகு குறித்து கலைவிமர்சகர்கள் எழுதிய நூலும் விழா மேடையில் வெளியிடப்பட உள்ளது.
இதுவரை இந்த விருது, கீழ்க்காணும் படைப்பாளுமைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது:
2010 - ஆ. மாதவன்
2011 - பூமணி
2012 - தேவதேவன்
2013 - தெளிவத்தை ஜோசப்
2014 - ஞானக்கூத்தன்
2015 - தேவதச்சன்
2016 – வண்ணதாசன்
2017 – சீ. முத்துசாமி
2018 – ராஜ் கெளதமன்