கோவையில் கல்லூரி பேராசிரியைக்கு காதல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்து வந்த இளைஞர் கைது

கோவை: கோவை ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் கல்லூரி பேராசிரியைக்கு, தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் கல்லூரி பேராசிரியைக்கு, தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் பணிநிமித்தமாக கல்லூரி செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பவர் தினமும் அவரை பின்தொடர்ந்து வந்தும், புகைப்படம் எடுத்தும் மிரட்டி வந்துள்ளார்.

இந்தநிலையில் நாளுக்கு நாள் மணிகண்டனின் தொல்லை அதிகமாகியதால் பயந்துபோன பேராசிரியை அவரது தந்தையிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

இப்படியிருக்க பேராசிரியையின் தந்தை இன்று பாதுகாப்புக் காரணம் கருதி தனது மகளை ராமநாதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏற்றி விட சென்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் மணிகண்டனை எதற்காக என் மகளை பின்தொடர்கிறாய் ? என்றும் ஏன் புகைப்படம் எடுத்து மிரட்டுகிறாய் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் அவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த மணிகண்டன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, பேராசிரியையின் தந்தை ராமநாதபுரம் காவல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் முருகேசன் உத்தரவின் பேரில் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும், அவர் மீது 506(ii), 75, மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...