கோவையில் பதினொன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரம்; கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கோவை சீரநாயக்கன்பாளையத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பெரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை சீரநாயக்கன்பாளையத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பெரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 26ஆம் தேதி கோவை சீரநாயக்கன்பாளையத்தில் தனது உறவினருடன் பிறந்தநாள் கொண்டாட அதே பகுதியில் உள்ள பூங்காவிற்கு வந்த

11ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆடைகளை அகற்றி மொபைலில் வீடியோ பதிவு செய்ததுடன், பாலியல் துன்புறுத்தல் செய்தனர்.

இதுதொடர்பாக பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்ததையடுத்து மேற்கு பகுதி ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதேப்பகுதியை சேர்ந்த கார்த்திக், ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி, ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இந்த வழக்கில் கைதாகியுள்ள மணிகண்டன், கார்த்திக் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. 5U READ WITH 9G - பொது இடத்தில் ஆடைகளின்றி மோசமாக பாலியல் துன்புறுத்தல் செய்வது, 6 read with 7, 10 - பாலியல் தொந்தரவு, 13 read with 14 - ஆடைகள் இன்றி ஆபாசமாக மொபைலில் காட்சிப்படுத்துதல், 17 - கூட்டாக குற்றத்தை செய்ய தூண்டுதல் என 4 பிரிவுகள் போக்ஸோ சட்டத்தின் படி மற்றும் 354 IPC - மானபங்கம் படுத்துதல், 506(2) IPC - கொலை மிரட்டல் ஆகிய 6பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைதான 6 பேர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டமான தமிழ்நாடு தடுப்புக்காவல் சட்டம் 1982ன் கீழ் தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையை கோவை மத்திய சிறையில் அடுக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் வழங்கப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...