நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்,

கோத்தகிரி கட்டப்பெட்டு, அரவேணு பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது என்றும் உள்ளாட்சி தேர்தல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்படியாவது இந்த தேர்தல் தள்ளிப் போய்விடும் என நினைத்தார்கள், அவர்கள் நினைப்பு ஈடு ஏறவில்லை என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது என்றார்.
மேலும், ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நல்ல வேட்பாளர்களை நிறுத்தி, அவர்கள் வழியாக எப்படி மக்களுக்கு சேவை செய்யலாம் என்பதை எல்லாம் விட்டு விட்டு, குடியுரிமைச் சட்டம் இந்திய குடிமக்களுக்கு, குறிப்பாக இந்திய இஸ்லாமிய மக்களுக்கு எந்த விதத்திலும் பொருந்தாத சட்டத்தை எடுத்துக் கொண்டு பேரணி நடத்தி கொண்டிருப்பதாக கூறினார்.
இந்த நாட்டில் இருக்கக் கூடிய இஸ்லாமிய குடிமக்கள், இந்தியர்களோடு சேர்ந்து வாழ்வதற்கும் அவர்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கும் எந்தவித இடையூறும் கிடையாது என்றும் இந்த சட்டம் முழுக்க முழுக்க 3 நாடுகளை சேர்ந்த சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் ஒரு சலுகை கூடிய சட்டம் வழக்கமாக 11 வருடங்கள் இருப்பது என்பதை 5 வருடங்களாக குறைத்ததே இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம், ஆனால் இந்திய முஸ்லீம்களை எல்லாம் பாரத பிரதமர் நாட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் என்பதை போல பிரச்சாரம் செய்து இன்று முஸ்லீம்களுக்கு எல்லாம் நாங்கள் தான் பாதுகாவலன் என பேரணி நடத்தி கொண்டு இருக்கின்றனர் என விமர்சனம் செய்தார்.
இந்துக்களுடன் மதச்சார்பு இல்லாத அரசாங்கத்துடன் நன்றாக வாழ முடியும் என்ற காரணத்தினால் இஸ்லாமியர்கள் இங்கேயே தங்கி அவர்களின் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் நாடு பிரிந்து சென்ற போது இருந்த இந்து மக்கள் தொகை 22% சதவீதத்தில் இருந்த மக்கள் இன்று 7% சதவீதமாகக் குறைந்துள்ளது என்றவர், இத்தகவல் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் ஸ்டாலின் எடுத்து கூற வேண்டும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து கட்டப்பெட்டு, அரவேணு பகுதிகளில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு ஆகியோர் கூட்டணி கட்சியான பாஜக சார்பில் போட்டியிடும் நடுஹட்டி ஊராட்சிமன்ற தலைவர் குமார், மற்றும் அதிமுக கூட்டணி. ஜக்கனரை ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணலீலா மற்றும் 11வது வார்டு அதிமுக உறுப்பினர் சித்தர கலா உள்ளிட்ட பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.