நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

நீலகிரி: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

நீலகிரி: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் செய்தலுக்கு ஏராளமானோர் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து 01.01.2020 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு நடைபெற உள்ள சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் வெளியிடப்பட்டது. ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்குப் பிரதிகள் வழங்கப்பட்டது.



வரைவு வாக்காளர் பட்டியலின் படி, நீலகிரி மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 497 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 93 ஆயிரத்து 108 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5 லட்சத்து 66 ஆயிரத்து 614 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஒப்பிடும் போது 3299 பேர் குறைந்துள்ளனர். நீலகிரியில் மொத்தம் 683 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இப்பட்டியலின்படி, வழக்கம் போல் நீலகிரி மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர்.



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் அனைத்து வாக்குச்சாவடிகள், ஆர்டிஒ., அலுவலகங்கள், தாலுக்கா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் இன்று (டிச., 23) துவங்கி ஜனவரி 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்த அதாவது 31.12.2001க்கு முன்னர் பிறந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆர்டிஒ., வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிய படிவத்தில் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். ஜனவரி மாதம் 4,5 மற்றும் 11,12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் தொடர்ந்து ஜனவரி 14ம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங், ஆர்டிஒ.,க்கள் சுரேஷ், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...