கோவையில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை; வடமாநில கும்பலை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது

கோவை: கோவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அதிக அளவில் அடிமையாகி வருகின்றனர். இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா விற்பனையாளர்கள் மாணவர்களை குறிவைத்து தீவிர விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும் கோவை மாநகர போலீசாரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையாளர்களை தடுக்கும் நோக்கில் கண்காணிப்புகளில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல, கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசாரும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெரியகடைவீதி அருகே சந்தேகத்துக்குரிய காரை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து, காரில் இருந்த மூவரை பிடித்து அவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கஞ்சா பொருட்களை ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கொண்டுவந்து கோவையில் மாணவர்களிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஜெயபால், திரன்மஹரனா, பருண்டக் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...