சோலையார் அணை நீர் மட்டம் 132 அடியாக சரிவு

கோவை: வால்பாறை பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் சோலையார் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. இதனால் சோலையார் அணையின் நீர் மட்டம் 132 அடியாக குறைந்துள்ளது.

கோவை: வால்பாறை பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் சோலையார் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. இதனால் சோலையார் அணையின் நீர் மட்டம் 132 அடியாக குறைந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் மூலாதாரமாக விளங்கும் சோலையார் அணை உள்ளது. இந்த அணை மூலம் பரம்பி குளம் வழியாக கேரளா, ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைக்கு நீர் செல்கிறது. இங்கிருந்து ஆனைமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம் மற்றும் கரூர் வரை பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.



இந்நிலையில், சோலையார் அணையின் நீர் மட்டம் 165 அடியிலிருந்து 132 அடியாக குறைந்துள்ளது. சோலையார் அணையின் நீர் பிடிப்பு பகுதியான சின்னகல்லார் நீரார் அணைகளுக்கு வரும் ஊற்று நீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது. கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, நல்லகாத்து ஆறு உட்பட பல ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் வரத்து மிகவும் குறைந்து ஆறுகள் குட்டைகளாக மாறி விட்டது.

மேலும் சோலையார் அணைக்கு 91 கன அடி நீரே வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து இரண்டு மின் நிலையங்கள் மூலம் 835 கன அடி நீர் மின் உற்பத்திக்குப்பின் கேரளா செல்கிறது. இதன் காரணமாக சோலையார் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. மழை தொடர்ந்து கிடைக்காத நிலையில் சோலையார் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...