கோவை: கல்குவாரி அமைப்பதற்கு வழங்கிய ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

செட்டிபாளையம் பேரூராட்சி ஓராட்டுக்குப்பை கிராம பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தங்கள் பகுதியில் அமைய இருக்கும் கல்குவாரி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 2018 முதல் 2023 வரை அல்ட்ரா ரெடி மிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு குவாரி அமைக்க அனுமதி வழங்க ஆணை அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைக்க பெற்று உள்ளதாகவும் இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், 2017ம் ஆண்டு முதல் இதனை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என தொடர்ந்து மனு அளித்து வருவதாக தெரிவித்த அவர்கள், ஏற்கனவே இப்பகுதியில் ஆறு கல்குவாரிகள் அமைந்துள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அமைய உள்ள கல்குவாரி விவசாய நிலங்கள் அருகில் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ள பகுதியில் அமைய உள்ளதால் முற்றிலும் தென்னை விவசாயம் பாதிக்கப்படும் எனவும் நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்படும் நிலை உள்ளது எனவும் முந்நூறு மீட்டர் தூரம் தாண்டி அமைக்க வேண்டுமென்ற விதிமுறையை மீறி அனுமதி வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டினர்.
அதேபோல, கல்குவாரிகளில் இருந்து வரும் துகள்களால் ஏற்கனவே 600க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிப்பு ஏற்பட்டு வெட்டப்பட்டு விட்டதாகவும் கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகள் காரணமாக அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் வேலுமணியிடம் முறையிட்ட போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றவர்கள் இந்த கல்குவாரி ஆணையை ரத்து செய்யாவிட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மிக பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.