கோவை: விடுமுறை தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது

கடந்த 15ம் தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெறும் இந்த யானைகள் முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 28 கோவில் யானைகள் பங்கேற்றுள்ளன. இந்த முகாமில் யானைகளுக்கு பசுந்தீவனம், நடைப்பயிற்சி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்களும் கண்டுகழிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
பள்ளிகளுக்கு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மேட்டுப்பாளையம் யானைகள் முகாமினை காண வந்ததால் சுற்றுலா தளமாக மாறி கூட்டம் அலைமோதியது. முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் நடைப்பயிற்சி, யானைகள் உணவு உட்கொள்வது படுத்து தூங்குவது போன்ற செயல்களை காண யானைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தனியாக பார்வையாளர்களுக்கு தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து யானைகளை குழந்தைகளுக்கு காண்பித்து மகிழ்ந்தனர்
கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று யானை முகாமினை பார்வையிட்டனர்.

மேலும், ஒரே இடத்தில் இவ்வளவு கோவில் யானைகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததுடன் அவைகள் செய்யும் குறும்பு தனங்களை பார்த்து குழந்தைகள் மிகவும் உற்சாகம் அடைந்தனர். தற்போது யானைகளை காண மக்கள் கூட்டம் அதிக அளவில் தேக்கம்பட்டியில் குவிந்து வருவதால் மக்களுக்காக ஆங்காங்கே சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டு யானைகள் முகாம் ஒரு சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது.