கோவை: இளைஞர்கள் மத்தியில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் ஆறு மாதத்தில் சைபர் காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கோவையில் நடைபெற்ற நான்காவது இந்தியன் சைபர் மாநாட்டில் தமிழக காவல்துறையின் கூடுதல் இயக்குனர் ரவி தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: இளைஞர்கள் மத்தியில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் ஆறு மாதத்தில் சைபர் காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கோவையில் நடைபெற்ற நான்காவது இந்தியன் சைபர் மாநாட்டில் தமிழக காவல்துறையின் கூடுதல் இயக்குனர் ரவி தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை கிருஷ்ணா கல்லூரியில் இணையதள பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏடிஜிபி ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் "நெட்வொர்க் செக்யூரிட்டி", "சைபர் செக்யூரிட்டி" பற்றிய தீர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதேபோல மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த எச்சரிக்கைகள் பல்வேறு ஆலோசனைகளாக வழங்கப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அரசியலமைப்பு சட்டத்தின் நுணுக்கங்களும் மாண்புகளும் தான் நம்மை பாதுகாக்கும் எனவும் அதை நாமும் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்ததுடன் செயற்கை நுண்ணறிவுகள் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். அதேபோல நீதித்துறையில் சைபர் வழக்குகளை விசாரிப்பதிலும், தீர்வு காண்பதிலும் வளர்ச்சி அடைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் ஏ.டி.ஜி.பி. ரவி கூறும்போது:-

ஆபாச படங்கள் தொடர்பான இணையதளங்களை டெலிட் செய்ய தமிழக காவல்துறை சார்பில் "சர்வீஸ் புரோவைடர்ஸ்க்கு" பரிந்துரை செய்துள்ளோம். இதில் பல இணையதளங்கள் டெலிட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, டீப் வெப்சைட்டில் உள்ள வீடியோக்களை டெலிட் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் குற்றங்களின் புள்ளிவிவர தகவலின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான நகரங்களாக கோவை மற்றும் சென்னை திகழ்கின்றது. இன்னும் ஆறு மாதத்தில் சைபர் கிரைம் ஏடிஜிபி தலைமையில் சைபர் காவல் நிலையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வர உள்ளது.

இனிவரும் காலத்தில் அனைத்து காவல் நிலையங்களும் சைபர் கிரைம் காவல் நிலையங்களாகவும், புதிதாக சைபர் கிரைம் நீதிமன்றங்களும் உருவாகும், ஏனென்றால் சைபர் கிரைம் குற்றங்களே அதிக அளவில் நடைபெறுகிறது. அதேபோல ஆபாச படம் பார்ப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.