திருப்பூரில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7042 வேட்பாளர்கள் போட்டி; 1704 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு - மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7042 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த முழுமையான பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7042 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த முழுமையான பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், பல்லடம், வெள்ளகோயில், திருப்பூர் உள்ளிட்ட ஏழு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்டமாகவும் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட ஆறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9025 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன நிலையில், தற்போது 7042 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், 1704 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், 156 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் 94 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில், வாக்குப்பதிவிற்கு தேவையான தேர்தல் சீட்டுகளை பிரிக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பார்வையிட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...