குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அனைத்து மத அடையாளங்களை அணிந்து போராட்டம்; இந்திய மாணவர் சங்கத்தினர் 16 பேர் கைது

கோவை: கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பு அனைத்து மத அடையாளங்களையும் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பு அனைத்து மத அடையாளங்களையும் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் இயக்கங்கள், பல்வேறு கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம், சட்டக் கல்லூரி மாணவர்கள், அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், பி எஸ் ஜி கல்லூரி மாணவர்கள், பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் என தொடர்ச்சியாக தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், இன்று காந்திபுரம் பெரியார் படிப்பகம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று இந்து மத அடையாளம், முஸ்லிம் மத அடையாளம், கிறிஸ்துவ மத அடையாளம் ஆகியவற்றை அணிந்து மத ஒற்றுமையை காப்போம், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதேபோல குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 16க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...