காரமடையில் பள்ளி மாணவன் தற்கொலை விவகாரம்; நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் பெற்றோர்கள் புகார்

கோவை: வித்ய விகாஸ் பள்ளி மாணவன் இறப்பிற்குக் காரணமான நிர்வாகத்தினர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.


கோவை: வித்ய விகாஸ் பள்ளி மாணவன் இறப்பிற்குக் காரணமான நிர்வாகத்தினர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.



கோவை சூலூர் பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவர் அப்பகுதியில் கோழிக்கடை மற்றும் ஹாலோ பிளாக் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரது மகன் ஹரீஷ்(17) காரமடையிலுள்ள வித்ய விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளி வளாகத்திலுள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மருத்து அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்தவர்களை காவல் துறையினர் தடுத்ததால், வாக்கு வாதம் ஏற்பட்டது. மாணவனின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாணவனின் தந்தை குமார் பேசுகையில், தன் மகன் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளதாகவும், தற்கொலை செய்யுமளவுக்கு போகமாட்டான் என கூறினார். நேற்று மாலை 4.57 மணியளவில், காரமடை ஆய்வாளர் நாகராஜ் தன்னை தொலைபேசியில் அழைத்து ஹரீஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தற்காகவும் அரை மணி நேரத்தில் தான் வந்துவிட்டதாகவும் ஆனால் அதற்குள் மாணவனின் உடல் விடுதி அறையில் இருந்து எடுக்கப்பட்டு, காரமடை காவல் நிலையத்தின் முன் அவசர ஊர்தியில் வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து மாணவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, தங்களிடம் தகவல் தெரிவிக்காமலே கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தார்.

தன்னுடைய மகன் நேற்று மதியம் 1.27 மணியளவில் வயிற்றுப் போக்கு காரணமாக எலக்ட்ரோல் பவுடரை சாப்பிட்டு விட்டு அவனது அறைக்கு சென்றுள்ளான் எனவும் அதை தலைமை வார்டன் வாங்கி கொடுத்துள்ள நிலையில், தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நேரத்தில் இருந்து உடலை வெளியே எடுத்து வரும் வரை அங்கிருந்த சிசிடிவியில் பதிவுகள் இல்லை எனவும் சிசிடிவி செயல்படவில்லை என சொல்வது மகன் மரணம் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். தன் மகன் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், மின் விசிறி இறக்கை ஒடுங்கவில்லை எனவும் இறந்த இடத்தில் இருந்து பத்தடி தள்ளி ரத்தம் சொட்டு சொட்டாக இருந்ததாகவும் கூறிய அவர், உதவி ஆய்வாளர் நாகராஜ் முதலில் கழுத்தை கத்தியால் அறுக்க முற்பட்டு பின்னர் தூக்கு மாட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அப்படி இருப்பின் அறை முழுவதும் இரத்தம் படிந்திருக்கும் ஆனால் அங்கு அந்த இடத்தில் ரத்த கறைகளே இல்லை என குற்றம் சாட்டினார். மேலும் ஹரீஷின் அறையில் அனைத்து பேப்பர்களும் சுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தனது மகன் இரத்தத்தை பார்த்தால் மயங்கி விழுந்து விடுவான் எனவும் அப்படியிருக்க தனது கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தற்கொலை செய்திருக்க மாட்டான் என்றார்.

 

மேலும், பள்ளி நிர்வாகத்தினர் வராமல் முதல்வர் மட்டும் தங்களிடம் ஆறுதல் சொல்லியதாகவும் தாசில்தார் சம்பவ இடத்தில் வீடியோ எடுத்திருப்பதாக தெரிவித்தார். காரமடை காவல் துறையினர் இப்பள்ளிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியவர்கள் தனது மகனுக்கு நடந்ததை போல் இன்னொரு மாணவனுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்ததாக தெரிவித்தார். அந்த மனுவில், தனது மகனை கொலை செய்த தலைமை வார்டன் மற்றும் உதவி வார்டன் மீதும் அவர்களுக்கு உதவியாக இருந்த உதவி ஆய்வாளர் நாகராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை வேறு காவல் நிலையத்திற்கோ அல்லது அமைப்புக்கோ மாற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...