கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததை கண்டித்து போராட்டம் நடத்தியதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவரின் ஒருவரான தெஹ்லான் பாகவி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததை கண்டித்து போராட்டம் நடத்தியதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவரின் ஒருவரான தெஹ்லான் பாகவி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமுருகன் காந்தி கூறும்போது:-

கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேரின் நீதி உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராடிய நாகை திருவள்ளுவனை சிறைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது எனவும் பல்வேறு பொய் வழக்குகளை போட்டு அவரை தொடர்ச்சியாக சிறையில் இருக்க அடக்கு முறையை அரசு ஏவியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நியாயம் கேட்டு போராடிய தலைவரை அரசு ஏன் சிறையில் வைத்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக அரசு அவர் மீது போட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற்று விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
மேலும், நாகை திருவள்ளுவன் மீது போடப்பட்டுள்ள பெரும்பாலான வழக்குகளில் உண்மையில்லை என நீதிபதிகளே தள்ளுபடி செய்துள்ளனர். அதேபோல, தமிழ் புலிகள் இயக்கத்தினர் காவல்துறையால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். சமூக கோரிக்கைக்காகப் போராடும் தலைவர்களை சமூக விரோதிகள் போல் சித்தரித்து குண்டர் சட்டம் போடுவது வன்மம் ஆனது என்றவர், தமிழகத்தில் அரசியல் சாசனத்திற்கு எதிராக போராடுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல போராடுபவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுகிறது.வெள்ளைக்கார ஆட்சியில் கூட இப்படி இல்லை எனவும் அரசியல் சாசனத்தை அரசே மீறுகிறது என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் தெஹ்லான் பாகவி கூறும்போது:-

மேட்டுப்பாளையத்தில் நடந்தது விபத்தல்ல படுகொலை என்றும் நாகை திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தியதும், வழக்குகளும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களும் திரண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். எமெர்ஜென்சிக்கு பிறகு மோடி அரசுக்கு எதிரான வலிமையான போராட்டமாக உருவெடுத்துள்ளது. மோடி அரசு பதவி விலகும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் நிதிஷ்குமார் போல குடியுரிமை சட்டத்திற்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.