வால்பாறையில் அறுவடைக்கு தயாரான காபி பழம் பறிக்கும் பணி தீவிரம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள காபி பழம் அறுவடைக்கு தயாரான நிலையில் பழங்களை பறிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள காபி பழம் அறுவடைக்கு தயாரான நிலையில் பழங்களை பறிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.



வால்பாறையில் பச்சமலை, பழைய வால்பாறை, வறட்டுப்பாறை. வில்லோனி, புதுத்தோட்டம் மற்றும் குரங்குமுடி பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி பயிரிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பூ பிடித்து காய்த்து டிசம்பர் மாதம் காய் பழுத்து அறுவடைக்கு தயாராகிறது.



இந்நிலையில், இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் போதிய மழை கிடைத்ததால் காபி செடிகளில் அதிகப்படியான காய்கள் காய்த்து பழங்கள் பழுத்து வருகின்றன. அறுவடைக்கு தயாரான காபி பழங்களைப் பறிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. காபி தோட்டங்களில் விஷ வண்டுகள் அதிகம் இருக்கும் என்பதால் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தலையில் தலை கவசம் அணிந்து காபி பழங்களை பறித்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காபி பழம் அதிகம் பழுத்துள்ளதாக தெரிவித்த தொழிலாளர்கள், இதனால் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக கூறினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...